More

ரூ.5-க்கு நாப்கின்… தமிழகத்தில் முதல்முறை… கடலூர் போலீஸ் ஸ்டேஷனில் வெண்டிங் மிஷின்கள்

பணியின்போது பெண் காவலர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள் சொல்லி மாளாது. அதுவும் வெளியூர் பயணங்கள், அரசியல் கட்சி மாநாடுகள், பாதுகாப்புப் பணி போன்றவற்றின் போது மாதவிடாய் நாட்களையும் அவர்கள் எதிர்க்கொள்ள வேண்டிய கடுமையான சூழல் இருக்கிறது. கழிப்பறை வசதிகள் இல்லாமை, கழிப்பறைகள் இருக்கும் சில இடங்களில் அவற்றைப் பயன்படுத்த முடியாத சூழல் என ஆண் காவலர்களை விட பெண் காவலர்கள் கடுமையான சூழலைச் சமாளிக்க வேண்டிய நிலை இருக்கிறது. 

Advertising
Advertising

இந்தநிலையில், கடலூரில் பெண் காவலர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சி.அபினவ் ஐபிஎஸ் முடிவு செய்தார். அதன்படி, கடலூர் காவல்நிலையங்களில் நாப்கின் வெண்டிங் மிஷின்களை வைக்க அவர் நடவடிக்கை எடுத்தார். 

சானிட்டரி நாப்கினை சுலபமாக பெற  மாவட்ட காவல் அலுவலகம், ஆயுதப்படை வளாகம் உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள 46 காவல் நிலையங்கள் ,ஆறு மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து காவல் நிலையம், இவை மட்டும் இல்லாமல்  பாதுகாப்பு பணியில்  ஈடுபடும்போது   பயன்படுத்தப்படும் வகையில், மொத்தம் 65 இடங்களில் நாப்கின் வெண்டிங் மிஷின்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு தனியார் நிறுவனத்தின்  உதவியுடன் வெண்டிங்  மெஷின்  மூலம்  சானிடரி நாப்கின் பெறும் வசதியை கடலூர் மாவட்ட எஸ்.பி அபினவ் தொடங்கி வைத்தார். 

ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை அந்த கருவிக்குள் செலுத்தினால், வெண்டிங் கருவியில் இருந்து ஒரு நாப்கின் வெளிவரும். வெளி சந்தைகளில் விற்கப்படும்  நாப்கின்களை ஒப்பிடும்போது, இதன் விலை குறைவாக இருப்பதாகவும், இது மாதவிடாய் காலங்களில் நல்ல விஷயம் என்று நிகழ்சியில் கலந்துகொண்ட பெண் காவலர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து பேசிய எஸ்.பி அபினவ், “தமிழகத்தில் முதல் முறையாக கடலூர் மாவட்டத்தில் பெண் காவலர்கள், அதிகாரிகள் நலனைக் கருத்தில் கொண்டு இந்த எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் பணியின்போது, இந்த எந்திரத்தில் உள்ள நாப்கினைக் குறைந்த கட்டணத்தில் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதேபோல் பாதுகாப்புக்காக வெளியில் செல்லும் போது நடமாடும் கழிவறை வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனத்திலும் சானிட்டரி நாப்கின் எந்திரம் பொருத்தப்பட்டு உள்ளது. இதை பெண் போலீசார், அதிகாரிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்’’ என்றார்.

Published by
adminram

Recent Posts