
கன்னட படமான கேஜிஎப்ஃ தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொழிமாற்றம் செய்யப்பட்டு ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்று கன்னட திரையுலகில் ரூ.100 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.
அதன் தொடர்ச்சியாக கேஜிஎஃப்-2 உருவாகி வருகிறது. தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற 21ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நராச்சியின் கதவு இன்னும் 2 நாட்களில் திறக்கப்படும் என புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதைப்பார்க்கும் போது நராச்சி என்பது இப்படத்தின் மெயின் வில்லனின் பெயராக இருக்கும் என கருதப்படுகிறது.
2 days to open gates of Narachi ⛩️@TheNameIsYash #KGFChapter2FirstLook #KGFChapter2FLonDec21 @hombalefilms pic.twitter.com/PRPNS7Xo3g
— Prasad Bhimanadham (@Prasad_Darling) December 19, 2019



