சிறந்த படம் அசுரன்.. சிறந்த நடிகர் தனுஷ்... 2019ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் அறிவிப்பு
2019ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வெளியாகும் அனைத்து மொழிகளில், பல பிரிவுகள் திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழில் சிறந்த படமாக தயாரிப்பாளர் எஸ். தாணு தயாரித்து, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது. அதேபோல், அப்படத்தில் நடித்த தனுஷுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு ஜூரி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வாசம் படத்தில் இசையமைத்த இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.அதோடு, நடன இயக்குனர் ராஜு சுந்தரத்திற்கு சிறந்த நடன இயக்குனர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.