இதனையடுத்து இன்று முதல் ‘தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பில் கீர்த்திசுரேஷ் கலந்து கொண்டார். தேசிய விருது பெற்ற பின் முதல்முறையாக படப்பிடிப்பில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷுக்கு தரமான சம்பவமாக மிகச்சிறந்த முறையில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க ’தலைவர் 168’ படக்குழுவினர் முடிவு செய்தனர்
இதனையடுத்து சர்ப்ரைஸாக அவருக்காக ஒரு பெரிய கேக் தயார் செய்து வைத்திருந்தனர். கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்புக்கு உள்ளே வந்தவுடன் உடனே கேக் வெட்டி அவருக்கு சர்ப்ரைஸ் அளித்தனர். இதனால் கீர்த்தி சுரேஷ் உச்சகட்ட மகிழ்ச்சி அடைந்தார். அதுமட்டுமின்றி ரஜினிகாந்த் கேக்கை எடுத்து கீர்த்தி சுரேஷின் வாயில் ஊட்டியது கீர்த்தி சுரேஷுக்கு மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே இந்த படத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு உள்ளிட்டோர் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது சூரி மற்றும் கீர்த்தி சுரேஷூம் படப்பிடிப்பில் கலந்துகொண்டதால் படப்பிடிப்பு தளம் களைகட்ட தொடங்கிவிட்டது.
சினிமாவில் நடிக்க…
பழம்பெரும் நடிகை…
1960 காலகட்டங்களில்…
தமிழ் சினிமாவில்…
கோட் திரைப்படத்திற்குப்…