More

தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் கூடாது – பாமக பொதுக்குழுவில் தீர்மானம்

சமீபத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு நாடு முழுவதும் போராட்டம் எழுந்தது. டெல்லியில் துவங்கிய போராட்டம் படிப்படியாக இந்தியாவின் பல மாநிலங்களிலும் வெடித்தது. 

அதேபோல், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தையும் மத்திய அரசு துவங்கியுள்ளது. இதன் மூலம் சரியான ஆதரமில்லாதவர்கள் இந்தியாவில் வசிக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால் இதற்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், இன்று நடத்தப்பட்ட பாமக பொதுக்குவில் தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்த போது, கூட்டணி தர்மம் கருதி அதை ஆதரிக்க வேண்டியுள்ளது என டாக்டர் ராமதாஸ் கூறியது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.
 

Published by
adminram

Recent Posts