ரஜினியின் அடுத்த படத்தில் நயன் தாரா? அதிகாரபூர்வ அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகிவரும் ’தலைவர் 168’திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாவும் இன்னொரு ஜோடியாக குஷ்புவும், மகளாக கீர்த்தி சுரேஷும் நடித்து வருவதாக கூறப்படுகிறது 

இந்த நிலையில் தற்போது திடீரென இந்த படத்தில் நான்காவது நாயகியாக நயன்தாரா இணைந்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

ஆனால் நயன்தாராவுக்கு இந்த படத்தில் என்ன கேரக்டர்? ரஜினிக்கும் அவருக்கும் என்ன உறவு என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது. ஏற்கனவே மூன்று முக்கிய நடிகைகள் இருக்கும் இந்த படத்தில் நான்காவதாக ஒரு பெரிய நடிகையை ஒப்பந்தம் செய்யும் அளவுக்கு இந்த படத்தில் அவருக்கு என்ன கேரக்டரை இயக்குனர் சிறுத்தை சிவா கொடுத்திருப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Published by
adminram