More

காதலனுடன் பறந்து கொண்டே இருக்கும் நயன்தாரா – வைரலாகும் புகைப்படம்

போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன், தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் நானும் ரவுடிதான் படத்தை இயக்கி ஹிட் இயக்குனராக தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். அந்த படத்தில் நடித்தபோது தான் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்தனர்.

Advertising
Advertising

படம் வெளியாகி 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இவர்களது காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர் என்று பல வதந்திகள் வந்தாலும் அவர்கள் திருமணத்தை பற்றிய நல்ல செய்தி எதுவும் கூறாமல் ஊர் சுற்றி வருகிறார்கள்.

படப்பிடிப்பு ஏதும் நடைபெறாத நிலையில், கொரோனா ஊரடங்கால் 5 மாதங்கள் வீட்டில் முடங்கியிருந்த நயனும், விக்னேஷ் சிவனும் தற்போதும் மீண்டும் ஊர்சுற்ற துவங்கி விட்டனர். ஓணம் பண்டிகையை கொண்டாட தனி விமானத்தில் இருவரும் சென்றனர். அதன்பின் கோவாவிற்கு சென்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில், மீண்டும் ஒரு தனி விமானத்தில் இருந்து இருவரும் இறங்கி வரும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இது கோவாவிலிருந்து இருவரும் திரும்பிய புகைப்படமா என தெரியவில்லை.

Published by
adminram

Recent Posts