More

நயன்தாரா – விக்னேஷ் சிவனின் ரொமான்டிக் ஓணம் கொண்டாட்டம்!

 நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலிப்பது ஊரறிந்த விஷயம். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்கிறார்கள். தர்பார் படத்துக்காக நயன்தாரா மும்பை சென்ற போது கூட விக்னேஷ் சிவன் அங்கு சென்றுள்ளார்.

விக்னேஷ் சிவனின் குடும்பத்தினர் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. நயன்தாராவோ அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்ப்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் படுத்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு சமயம் என்பதால் நயன்தாராவுடன் சேர்ந்து எங்கும் ட்ரிப் செல்ல முடியவில்லை என விக்னேஷ் சிவன் வருத்தப்பட்டு சமீபத்தில் இன்ஸ்டாவில் கூறியிருந்தார். இந்நிலையில் தற்ப்போது சுமார் 8 மாதங்களுக்கு பிறகு கேரளாவில் உள்ள நயன்தாராவின் வீட்டில் ஓணம் பண்டிகை கொண்டாட தனி விமானத்தில் இருவரும் சென்றுள்ளனர். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியத்தை தொடர்ந்து தற்ப்போது இருவரின் ரொமான்டிக் புகைப்படங்கள் வெளியாகி தீயாக பரவி வருகிறது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts