தமன்னா, சமந்தா ஓரம்போங்க.. இப்போ என்னோட டர்ன்! பழைய ரூட்டுக்கு தாவிய நயன்

Published on: March 18, 2025
---Advertisement---

பாடல்களின் முக்கியத்துவம்:

ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ அதேபோல ஒரு படத்திற்கு அதில் அமைந்துள்ள பாடல்களும் மிக மிக முக்கியமாகும். படத்தில் அமைந்த பாடல்களே ஒரு படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்திருக்கின்றன. படத்தின் கதை ரசிக்கும்படியாக இல்லை என்றாலும் அந்த படத்தில் அமைந்த பாடல்களால் அந்த படத்தை மக்கள் வெற்றியடைய செய்துள்ளனர். அப்படிப்பட்ட பல திரைப்படங்கள் இந்த தமிழ் சினிமாவில் வெளிவந்திருக்கின்றன.

அதனால் பாடல் தானே என அதையும் நாம் அலட்சியமாக கடந்து விட முடியாது. முந்தைய காலகட்டத்தில் எம் எஸ் விஸ்வநாதன் தொடங்கி இளையராஜா வரை அவர்கள் இசையில் அமைந்த அனைத்து பாடல்களும் பெரும்பாலும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கின்றன. இன்று வரை இளையராஜாவின் பாடல்களை நாம் ஒவ்வொரு முறையும் பயணம் செய்யும்போது காரிலோ பேருந்திலோ கேட்டுக்கொண்டே இருக்கின்றோம்.

ஊ சொல்றியா:

அந்த அளவுக்கு அந்த பாடல்கள் எல்லாம் நம் வாழ்க்கையை பரவசப்படுத்துபவையாக அமைந்து வருகின்றன. இப்படி ஒரு படத்திற்கான பாடல்கள் எந்தளவு முக்கியம் என்பதற்கு இப்போது உள்ள காலகட்டத்தில் உதாரணமாக இருந்தது புஷ்பா படத்தில் அமைந்த ஊ சொல்றியா பாடல். அந்த படத்தின் கதையை எடுத்துக் கொண்டால் ஒரு சாதாரண கதை தான். செம்மர கடத்தல் இவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதை.

வழக்கமான கதையாக இருந்தாலும் படத்திற்கு மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தியது சமந்தாவின் நடனத்தில் வெளியான ஊ சொல்றியா பாடல். அது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களிடையே எப்பேர்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது என அனைவருக்குமே தெரியும். ஏன் இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் விராட் கோலி கூட அந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

காவாலா:

அப்படி அந்த பாடல் உலகெங்கிலும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அதற்கு அடுத்தபடியாக பெரிய சென்சேஷனாக மாறிய பாடலாக தமன்னாவின் நடனத்தில் வெளியான கவாலா பாடல் அமைந்தது. ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா ஆடிய ஆட்டம் அனைவரின் கவனத்தையும் அவர் பக்கம் திருப்பியது. அதுவரை ஹிந்தியில் மட்டுமே கிளாமரான நடனத்திற்கு ஆடிவந்த தமன்னா முதன் முறையாக இந்த அளவு ஆடியது ஜெயிலர் திரைப்படத்தில் தான்.

மீண்டும் பழைய ரூட்டுக்கு தாவிய நயன்தாரா:

இப்படி இந்த பாடல்கள் மூலம் தமன்னாவும் சமந்தாவும் மேலும் உச்சத்தை அடைந்தனர். இந்த வரிசையில் அடுத்ததாக இணைந்துள்ளார் நடிகை நயன்தாரா. பிரபல தெலுங்கு பட ஹீரோ பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப் என்ற திரைப்படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு நயன்தாரா நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. இன்னும் அதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை

இந்த ஒரு செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. திருமணத்திற்கு முன்பு அதாவது ஆரம்ப கட்டங்களில் நயன்தாரா சிறப்பு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். கிளாமராகவும் ஆடியிருக்கிறார். ஆனால் காதல் திருமணம் என இந்த பந்தத்திற்குள் வந்த பிறகு தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் நயன்தாரா. இப்போது மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாட போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment