கோல்டன் ஹார்ட் அம்மு... மாமியாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். காதலர்களின் மிகசிறந்த காதல் ஜோடியாக அடையாளம் காட்டப்படும் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்துகொள்வதில் மட்டும் பல வருடங்களாக தாமதம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் நயன்தாராவும் கேப் விடாமல் நடித்து வருகிறார். இந்த சமயத்தில் திடீரென திருமணம் செய்துக்கொண்டால் மார்க்கெட் இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் திருமணத்தை தள்ளிபோட்டுக்கொண்டே செல்கிறார்.
இருந்தாலும் இருவரும் மிகவும் அன்யுன்யமாக காதலித்து வருகின்றனர். நேற்று நயன்தாராவின் அம்மா ஓமனா குரியன் அவர்களுக்கு பிறந்தநாள். இதையடுத்து நயன்தாரா தன் காதலனுடன் கேரளாவுக்கு சென்று அம்மாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். விக்னேஷ் சிவனும் மாமியாரை, என் அன்பான ஓமனா குரியன் அம்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.தங்க இதயம் கொண்டவர் என கூறியுள்ளார்.