
தமிழ் சினிமாவின் செம கியூட் காதல் ஜோடி என பெயர் பெற்றவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஜோடி. நானும் ரௌடி தான் படத்தில் நடித்த போதிலிருந்தே இருவரும் காதலித்து வருகின்றனர். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காதுவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.
Also Read

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா செம சர்ப்ரைஸ் கொடுத்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று காதுவாக்குல ரெண்டு காதல் படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் இன்னும் சற்றுநேரத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது



