நயன்தாரா அதிக செலவு வைக்கிறார் – பிரபல தயாரிப்பாளர் புகார்

25368afb61b4a598d5a2db2d17860b21-1

ரிஷி ரித்வி, ஆஷா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் மரிஜூவானா. இப்படத்தை எம்.டி.ஆனந்த் இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனை குழு உறுப்பினர் மற்றும் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும் போது ‘ கோடி கோடியாக சம்பளம் வாங்கும் நடிகைகளின் உதவியாளர்களுக்கும் படி கொடுக்க வேண்டியுள்ளது. நயன்தாராவுடன் சிகை அலங்காரம் செய்பவர், ஒப்பனை கலைஞர், டிரைவர் என 6 பேர் வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தினமும் ரூ.12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை தயாரிப்பாளர் பேட்டா கொடுக்க வேண்டியுள்ளது.

இதுவே தினமும் ரூ.60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை செலவாகிறது. தமன்னா, சமந்தா உள்ளிட்டோருக்கும் இதே போல் படி கொடுக்க வேண்டியுள்ளது. இந்த செலவுகளை நடிகைகளே ஏற்க வேண்டும். இதுபற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் பேசி முடிவு எடுக்கப்படும்’ என அவர் தெரிவித்தார்

Categories Uncategorized

Leave a Comment