ஒருநாள் குடை பிடிச்சா ரூ.5 லட்சம் - நயன்தாராவுக்கு இப்படி ஒரு இரக்க மனசா?...

by adminram |

c1cda26dc04bc56cdc1b384fc8698df5-2

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. ரூ. 5 கோடியிலிருந்து ரூ.6 கோடி வரை சம்பளம் பெறும் நடிகை. இவரின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்களும், நடிகர்களும் தவம் கிடக்கின்றனர். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நெற்றிக்கண்’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. நயன்தாரா மிகவும் கோப குணம் கொண்டவர் என்றெல்லாம் படப்பிடிப்பில் பலரும் கூறுவதுண்டு. ஆனால், அவரின் மறுபக்கம் பற்றி தற்போது தெரியவந்துள்ளது.

1453362c11e6ef929249a57bf9da52bb

நடிகர் ஜீவாவுடன் அவர் நடித்த திரைப்படம் திருநாள். இப்படம் 2016ம் ஆண்டு வெளியானது. பொதுவாக நடிகைகள் படப்பிடிப்பில் இருக்கும் போது வெயில் பட்டு அவர்களின் மேக்கப் கலைந்து விடக்கூடாது என்பதற்காக ஒருவர் குடை பிடித்துகொண்டே அருகில் நிற்பார். இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்ற போது ஒரு 15 வயது சிறுவன் நயனுக்கு குடை பிடித்து நின்றுள்ளான். அடுத்த 2 நாட்கள் அந்த சிறுவன் வரவில்லை. அவனுக்கு பதில் வேறு சிறுவன் வந்துள்ளான்.

821a3284e096b15c2ce214cf0fb1cc81

எனவே, அந்த சிறுவன் எங்கே என படக்குழுவினரிடம் நயன்தாரா விசாரித்துள்ளார். அந்த சிறுவன் சென்னையை சேர்ந்தவன் எனவும், வீட்டில் ஏதே பிரச்சனை என்பதால் வரவில்லை எனவும் கூறியுள்ளனர். அந்த சிறுவனின் முகவரியை வாங்கிய நயன் சென்னையில் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் சிறுவனின் வீட்டில் சென்று விசாரிக்க சொன்னாரம். அதில், சிறுவனின் தாய் மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரை கவனிப்பதற்காக சிறுவன் படப்பிடிப்பு வராமல் போனது தெரியவந்துள்ளது. இதனைக் கேட்ட நயன் சிறுவனுக்கு ரூ.5 லட்சம் பணம் கொடுத்து உதவினாராம். ஒரு நாள் குடைபிடித்து நின்றதற்காக தன் அம்மாவின் சிகிச்சைக்கு நயன் அவ்வளவு பணம் கொடுத்த நயன்தாராவை நினைத்து அவனின் குடும்பமே நெகிழ்ந்து போனதாம்...

இந்த தகவலை வலைப்பேச்சு யுடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

Next Story