சம்பளத்தை டபுளாக உயர்த்திய நயன்தாரா! – கேட்டா உங்களுக்கு மயக்கம் வந்துடும்!

Published on: June 1, 2021
---Advertisement---

cc94e49d3adba4dd0c6ec5586a82c38b

ஐயா படம் மூலம் அறிமுகமானவர் நயன்தாரா. அப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை வருடங்களில் தன்னை ஒரு முன்னணி நடிகையாக உயர்த்தியுள்ளார் நயன்தாரா. துவக்கத்தில் ஹீரோவுடன் டூயட் பாட மட்டுமே வந்த அவர் மெல்ல மெல்ல தனது நடிப்புத்திறமையை காட்டும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார்.

மாயா, இமைக்கா நொடிகள், ஐரா, அறம் என கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார். இதன் காரணமாக தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக மாறியுள்ளார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உருவாகியுள்ளது. இவரின் கால்ஷீட்டுக்காக பெரிய நடிகர்களே காத்திருக்கும் அளவுக்கு அவரின் மார்கெட் உயரத்தில் இருக்கிறது.

5826adc248fa4632b12d0b50a08ab576

தற்போது அவரின் காதலர் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், அவர் நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக நயன்தாரா இருக்கிறார். தர்பார் படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் ரூ.6 கோடி. கதையும், கால்ஷீட்டையும் பொறுத்து சில படங்களுக்கு ரூ.5 கோடியும் வாங்குகிறார். 

இந்நிலையில், நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்திவிட்டாராம். அவர் நடிக்கும் திரைப்படங்கள் பல கோடிகள் வசூலை வாரிக்குவிப்பதால் அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்களும் தயாராகத்தான் இருக்கிறார்கள் என்பது கூடுத தகவல்…
 

Leave a Comment