டீக்கடை வியாபாரம் துவங்கிய நயன்தாரா… அடுத்து அரசியல்தானா?…..

தென்னிந்திய சினிமாவில்  லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. தமிழில் அஜித், விஜய் , ரஜினிகாந்த், என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிஸியான நடிகையாக மாறினார். அதுமட்டுமின்றி தெலுங்கு , மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து ஹிட் கொடுத்து வருகிறார்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து இயக்குனர்களின் ராசியான நடிகையாக வலம் வருண் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து சொந்த வாழ்க்கையில் பிசியாக இருந்தாலும் நடிப்பில் தூள் கிளப்புகிறார். நடிப்பு மட்டுமின்றி சைடில் பாக்கெட் மணிக்காக நிறைய விளம்பரங்களிலும் நடித்து கல்லா கட்டி வருகிறார்.

இந்நிலையில், ஒரு புதிய தொழிலில் அவர் முதலீடு செய்துள்ளார். பிரபல தேநீர் கடை நிறுவனமான ‘சாய் வாலே’ -வில் அவர் முதலீடு செய்துள்ளார். அவரின் காதலர் விக்னேஷ் சிவனும் முதலீட்டாளர்கள் பட்டியிலில் இணைந்துள்ளார். திரைப்படம் நடிப்பது, தயாரிப்பது என்பது மட்டுமில்லாமல் தற்போது வியாபாரத்திலும் நயன்தாரா கால் பதித்துள்ளார்.

நயன்தாரா ஒரு திரைப்படத்திற்கு ரூ.5 கோடி முதல் ரூ.6 கோடி வரை சம்பளம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
 

Published by
adminram