அம்மனுக்கு அருள் வரணும்னா நயன் வரணும்.. ‘மூக்குத்தி அம்மன் 2’ டேக் ஆஃப் ஆவதில் இப்படி ஒரு சிக்கலா?

by ராம் சுதன் |
அம்மனுக்கு அருள் வரணும்னா நயன் வரணும்.. ‘மூக்குத்தி அம்மன் 2’ டேக் ஆஃப் ஆவதில் இப்படி ஒரு சிக்கலா?
X

மதகஜராஜாவின் பெரிய வெற்றி: மதகஜராஜா வெற்றியை தொடர்ந்து மீண்டும் சுந்தர் சி மற்றும் விஷால் ஆகியோர் கூட்டணியில் மறுபடியும் ஒரு படம் உருவாக போவதாக ஒரு தகவல் கோடம்பாக்கத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றது. இந்தப் படத்தை பென்ஸ் மீடியா தயாரிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே விஷால் சுந்தர் சி கூட்டணியில் ஆம்பள திரைப்படம் வெளியாகி ரசிகர்களை ஓரளவு திருப்திப்படுத்திய நிலையில் அதன் பிறகு மதகஜராஜா திரைப்படம் வெளியானது. இந்த படம் எதிர்பார்க்காத ஒரு வெற்றியை பெற்று தந்தது. இண்டஸ்ட்ரி ஹிட் என்றே இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

மீண்டும் உருவாகும் அதே கூட்டணி: அதனால் இவர்கள் கூட்டணியில் மீண்டும் ஒரு படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பென்ஸ் மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சுந்தர் சி யின் பெரும்பாலான படங்களை பென்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறதாம். அதைப்போல வடிவேலுவை வைத்தும் கேங்ஸ்டர் என்ற திரைப்படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார். அந்த படத்தையும் பென்ஸ் மீடியா தான் தயாரிக்கிறது.

ஐசரி கணேஷ் வச்ச செக்: இந்த நிலையில் விஷாலை வைத்து மீண்டும் சுந்தர் சி ஒரு படத்தை இயக்கப் போகிறார் என தெரிந்ததும் ஐசரி கணேஷ் கொஞ்சம் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் ஐசரி கணேஷ் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை தயாரிக்க போவதாகவும் அதை சுந்தர் சி தான் இயக்கப் போகிறார் என்றும் திடீரென ஒரு அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தனர். ஆனால் அந்த படம் இன்னும் ஆரம்பிக்கப்படாத சூழ்நிலையில் இருக்கின்றது .இந்த நிலையில் சுந்தர் சி விஷாலை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்று தெரிந்ததும் ஐசரி கணேஷ் அதிர்ச்சியடைந்தாராம்.

மூக்குத்தி அம்மன் 2 படத்தை பொறுத்தவரைக்கும் அந்த படத்திற்காக பணம் போட்டது ஐசரி கணேஷ் தான். இருந்தாலும் அந்த படத்தில் நயன்தாரா நடிப்பதால் நயன்தாரா அந்த படத்திற்கு சம்பளம் வாங்காமல் அந்த படத்தின் இன்னொரு தயாரிப்பாளராக தன்னுடைய பெயரை போட வேண்டும் என கேட்டிருக்கிறார். அதனால் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் போது வேல்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் மூக்குத்தி அம்மன் 2 என்று தான் வெளியிட்டார்கள்.

ஆனால் டைட்டிலில் பெயர் போட்டாலும் இந்த படத்திற்காக நயன்தாரா இன்னும் கால்சீட் கொடுக்கவே இல்லையாம். அதனால் சுந்தர் சி நயன்தாரா எப்பொழுது கால்ஷீட் கொடுக்கிறாரோ அப்பொழுது இந்த படத்தை தொடங்கலாம். அது மட்டுமல்ல மதகஜராஜா என்ற ஒரு பெரிய வெற்றியை கொடுத்த சூட்டோடு நான் இன்னொரு படத்தையும் ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அதனால் முதலில் நயன்தாராவிடம் தேதியை வாங்கி விட்டு என்னிடம் சொல்லுங்கள் என சொன்னதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதனால் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் நகருமா நகராதா என்பது நயன்தாரா கையில் தான் இருக்கிறது.

Next Story