நயன்தாராவுக்கும் அவரது காதலர் விக்னேஷ் சிவனுக்கும் இடையிலான காதல் உறவில் விரிசல் விழுந்துள்ளதாக கடந்த சில நாட்களாக ஒரு செய்தி கோலிவுட்டை உலாவந்து கொண்டிருக்கிறது.
நயன்தாரா இப்போது இயக்குனர் விக்னேஷ் சிவனைக் காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். அதற்காக தமிழகம் எங்கும் உள்ள கோவில்களில் பிராத்தனைகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் நயன்தாரா தனியாக கலந்துகொண்டார்.
இதனால் அவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையிலான உறவில் விரிசல் விழுந்துள்ளதாக நெட்டிசன்கள் கொளுத்திப் போட்டுள்ளனர். ஆனால், அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்றும் இம்மாத இறுதியில் நடக்க இருக்கும் மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள நயன்தாரா தயாராகி வருவதாகவும் விக்னேஷ் சிவன் தனது படத்தின் திரைக்கதை அமைக்கும் வேளைகளில் பிஸியாக இருப்பதாலும் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை என சொல்லப்படுகிறது.
ஆர் ஜே…
Pushpa 2:…
சமீபத்தில் தனுஷ்,…
ஏ ஆர்…
Biggboss Tamil:…