நடிகை நயன்தாரா தெலுங்கில் உருவாக இருக்கும் அந்தாதூன் ரீமேக் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துள்ளார்.
கடந்த 2018 ஆம் வருடம் அக்டோபர் மாதம் பிரபல இந்தி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா, தபு மற்றும் ராதிகா ஆப்தே நடிப்பில் வெளிவந்த அந்தாதூன் ட்திரைப்படம் உலக அளவில் கவனம் ஈர்த்தது. மேலும் இந்த படத்தில் நடித்த ஆயுஷ்மான் குர்ராணாவுக்கு தேசிய விருது கிடைத்தது. ஆனால் அவருக்கு இணையான பாராட்டை இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த தபு பெற்றார்.
இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்ய மிகப்பெரிய போட்டி நிலவ, தமிழ் பதிப்பை தியாகராஜன் கைப்பற்றினார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நிதின் கைப்பற்றியுள்ளார். இந்த படத்தில அவரே கதாநாயகனாக நடிக்க முடிவு செய்து, தபு கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவை அனுகியுள்ளனர்.
இந்நிலையில் அந்த படத்தைப் பார்த்த நயன்தாரா அந்த கதாபாத்திரம் கள்ளக்காதலனோடு சேர்ந்து தன் கணவனையே கொலை செய்வது போன்ற காட்சிகள் இருப்பதால் தன்னுடைய இமேஜுக்கு சரிவராது என சொல்லி அந்த வாய்ப்பை தவிர்த்து விட்டாராம்.
சூர்யா அடுத்து…
சர்தார் 2…
தனுஷ், ஐஸ்வர்யா…
துல்கர் சல்மான்…
கார்த்திக் பல…