முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது வேண்டுமென்றே ஒரு சிலர் யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் அந்தத் திரைப்படத்திற்கு எதிரான செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி தங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்வதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் தற்போது தர்பார் திரைப்படத்திற்கும் நெகட்டிவ் கமெண்ட்டுகள், நெகட்டிவ் செய்திகள் வெளியிட தொடங்கிவிட்டனர்
குறிப்பாக தர்பார் திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு ரூபாய் 80 கோடிக்கு மேல் நஷ்டம் என்று செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. ஒரு திரைப்படத்தின் வியாபாரம் எவ்வளவு என்பது அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் மட்டுமே தெரிந்த நிலையில் இந்த வியாபாரத்தை தன் கண் முன்னே நடந்தது போல் போலியான புள்ளிவிவரங்கள் மூலம் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்
ஒரு திரைப்படம் வெளியாகும் தினத்திற்கு முந்தைய தினம் அந்த படம் ரூபாய் 80 கோடிக்கு மேல் நஷ்டம் என்ற செய்தியை வெளியிட்டால் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்படும் நிலை என்னவாக இருக்கும் என்பதை என்பது கூட தெரியாத மனிதத்தன்மையற்ற ஒரு செயலை ஒரு சிலர் செய்து வருகின்றனர். ரிலீசுக்கு முந்தைய நாளே இவ்வாறு நெகட்டிவ் செய்திகள் வெளியிடுவதால் அந்த படத்தின் வியாபாரம் பாதிக்கப்படுவதோடு சம்பந்தப்பட்ட நடிகரின் ரசிகர்களின் மனம் புண்படுமே என்ற குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் அவர்கள் இஷ்டத்திற்கு தங்களுடைய கற்பனைத் திறனை பயன்படுத்தி போலியான செய்திகள் வெளியிட்டு வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினி படம் என்றாலே இதுவரை தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்ததாக சரித்திரமே இல்லை என்பதுதான் வரலாறு. அந்த படத்தை அதிக ஆசை காரணமாக அதிக விலைக்கு வாங்கிய விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் தான் இதுவரை நஷ்டம் ஆகி உள்ளனர். ஆனால் தற்போது தயாரிப்பாளருக்கே நஷ்டம் என செய்தி வெளியிட்டு தங்கள் பொய் மூட்டைகளை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் ரஜினிக்கு எதிரான எதிரிகள் ஒன்றாக இணைந்துவிட்டனர் என்பது உறுதியாகியிருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…
Pushpa 2:…
சமீபத்தில் தனுஷ்,…
ஏ ஆர்…