கிடப்பில் கிடந்த செல்வராகவன் படம் ரிலீஸ்.. ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி...

by adminram |

5cd361f1c66bc49b021d361420076615

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே. உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் செல்வராகவன்.

அடுத்து தனது தம்பி தனுசை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இது காமெடி கலந்த காதல் கதையாகும். அதன்பின், மீண்டும் தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை இயக்கவுள்ளார்.

55052a000d95074b2fc880b60068b0b2

இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரும் நடித்து 2016ம் ஆண்டே உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படம் ஒரு பேய் படமகும். ஆனால், சில காரணங்களால் இப்படம் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், தற்போது இப்படம் அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.

இது செல்வராகவன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story