
விஜய் சூர்யா நடித்த ‘பிரண்ட்ஸ்’ திரைப்படத்தில் கட்டிட காண்டிராக்டர் நேசமணி கதாபத்திரத்தில் வந்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் நடிகர் வடிவேலு. 2 வருடங்களுக்கு முன்பு திடீரென முகநூல் மற்றும் டிவிட்டரில் #PrayForNesamani என்கிற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது. அதுவும் உலக அளவில் அதிகம்பேர் இந்த ஹேஷ்டேக்கில் டிவிட் செய்து தெறிக்கவிட்டனர்.

இந்நிலையில், இன்று காலை முதல் மீண்டும் #Nesamani என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கை பலரும் பகிர்ந்து வடிவேலு மீண்டும் நடிக்க வரவேண்டும் என பதிவிட்டு வருகின்றனர். மேலும், சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கமல், விஜய்சேதுபதி, பஹத் பாசிலுக்கு பதிலாக வடிவேலு, சார்லி, ரமேஷ் கண்ணா ஆகியோரின் முகத்தை வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையே நெட்டிசன்கள் உருவாக்கி விட்டனர்.
இந்த போஸ்டர் டிவிட்டரில் வைரலாக பரவி வருகிறது.





