
ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலரும் நடித்து நேற்று அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படம் ரசிகர்களை மிகவும் கவந்துள்ளது. திரைப்பட விமர்சகர்களும் இப்படத்தை மிகவும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இப்படத்தில் அமைக்கப்பட்ட அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது கபிலன், வெற்றி, டான்ஸிங் ரோஸ், ரங்கன் வாத்தியார், வேம்புலி, மீரான், மாஞ்சா கண்ணன், மாரியம்மா, கெவின் டாடி என கதாபாத்திர படைப்புகளை ரஞ்சித் சிறப்பாக அமைத்துள்ளார். அவர்களும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர்.

பாராட்டு ஒரு பக்கம் எனில் வழக்கம் போல் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் இப்பாத்திர படைப்புகளை வைத்து மீம்ஸ்களையும் உருவாக்கி வருகின்றனர். இதில் அதிகம் சிக்கியிருப்பது ரங்கன் வாத்தியாராக நடித்துள்ள பசுபதிதான். அதேபோல், கபிலனாக ஆர்யா நடித்த வேடத்தில் வடிவேல் நடித்தால் எப்படி இருக்கும் என சிலர் மீம்ஸ்களை உருவாக்கி உலவ விட்டுள்ளனர். சிலரோ இப்படத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களுக்கும் என் தலைவன் வடிவேல் பொருந்துவான் எனக்கூறி மீம்ஸ்களை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். இவை அனைத்துமே சமூக வலைத்தளங்களில் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு வைரலாக பரவி வருகிறது.






