கடவுள் இன்ச் இன்சா செதுக்கியிருக்காரு - மாளவிகாவை வர்ணித்து தள்ளும் நெட்டிசன்ஸ்!
பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது.
விஜய், விஜய்சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இதனால் படம் ஓடிடியில் ரிலிஸ் ஆகுமா என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
ஆனால், என்ன ஆனாலும் படம் திரையரங்கில்தான் வெளியாகும் என்பதில் விஜய் மற்றும் தயாரிப்பு தரப்பு உறுதியாக இருந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக செயல்பட்டு வரும் மாளவிகா மோகனன் தற்ப்போது, கிளாமர் உடையில் சூப்பர் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்ளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.