தமிழ் சினிமாவில் இளம் வயதில் சில திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் வனிதா விஜயகுமார். திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகி இருந்தார். அவ்வப்போது சில சர்ச்சை செய்திகளில் அடிபட்டார். சினிமா விஷயங்களை தாண்டி சொந்த விஷயங்களால் அதிகம் வனிதா விமர்சனம் செய்யப்பட்டார். 2 முறை விவாகரத்து ஆன அவர் பீட்டர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதிலும் சர்ச்சையில் சிக்கினார். பின் பீட்டரை பிரிந்தார்.
அதன்பின், பிக்பாஸ், சமையல் நிகழ்ச்சி, காமெடி நிகழ்ச்சியில் நடுவர் பின் பிபி ஜோடிகள் என நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர் ரம்யா கிருஷ்ணன் நடந்து கொண்டது பிடிக்காமல் அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். தற்போது நிறைய படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
குறிப்பாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு ஜோடியாக ‘பிக்கப்’ என்கிற படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வனிதாவை பலரும் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், கழுத்தில் தாலியுடன் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆனால், இது அவர் நடிக்கும் பிக்கப் படத்திற்காக என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…