தெலுங்குக்கு போகும் ‘நெற்றிக்கண்’ - நயன்தாரா வேடத்தில் யார் தெரியுமா?....
சித்தார்த், ஆண்ட்ரியா நடித்த ‘அவள்’ திரைப்படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர் இயக்குனர் மிலிந்த் ராவ். அடுத்து நயன்தாராவை வைத்து அவர் இயக்கிய திரைப்படம் ‘நெற்றிக்கண்’.
இப்படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தனது ரவுடி பேபி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. கண் பார்வையில்லாத நயன்தாரா ஒரு சைக்கோ கொலைகாரனை எப்படி வீழ்த்துகிறார் என்பதே இப்படத்தின் கதை. இப்படம் Blind என்கிற கொரிய படத்தின் ரீமேகும். முறைப்படி ரீமேக் உரிமை வாங்கி இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படம் தற்போது தெலுங்குகிற்கு செல்லவுள்ளது. தமிழில் நயன்தாரா நடித்த வேடத்தில் தெலுங்கில் அனுஷ்கா நடிப்பார் எனத்தெரிகிறது. அதற்கான பேச்சுவார்த்தை தற்போது துவங்கியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.