மக்கள் தொகையைக் கட்டுக்குள் கொண்டுவர இந்தியாவில் புதுச்சட்டம் கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு இருப்பதாக சொல்லப்படுகிறது.
மக்கள்தொகை அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. விரைவில் சீனாவை இந்தியா முந்தலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் மக்கள் தொகையை கட்டுக்குள் வைக்க இந்திய புதிய சட்ட மசோதாவை கொண்டுவர உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதன் படி இந்தியாவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களுக்கு அரசு சலுகைகள் நிறுத்தப்படும் என சொல்லப்படுகிறது. மூன்றாவது குழந்தை அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க படமாட்டாது உள்ளிட்டவைகளை கொண்டுவர இருக்கிறது. இந்த சட்டத்தை சீனா 30 ஆண்டுகளுக்கு முன்னரே தங்கள் நாட்டில் அமல்படுத்தி அது தோல்வியில் முடிந்து பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதால் அந்நாட்டில் இளைஞர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் வரிசையாக மசோதாக்களை அதிரடியாக செயல்படுத்தி வரும் பாஜக அரசு இந்த சட்டத்தையும் நிறைவேற்றிவிடும் என சொல்லப்படுகிறது.
அமரன் திரைப்படம்…
Lubber Pandhu: கடந்த…
Sun serials:…
Vikram: தமிழ் சினிமாவில்…
கடந்த 14…