
கொரொவின் பெருந்தொற்று காரணமாக திரையரங்குகள் ஓடாத நிலையில், தமிழ்திரையுலகில் பல படங்கள் ரிலீஸ் ஆக முடியாமல் தேங்கிக் கிடக்கின்றன.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இணையத்தில் நேரடியாக அதாவதுஓடிடியில் வெளியான முதல் படம் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள். தொடர்ந்து ஜெயம் ரவியின் பூமி, சூர்யாவி;ன் சூரரைப் போற்று ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. தனுஷின் ஜெகமே தந்திரம், படம் அடுத்த மாதம் ஓடிடிக்கு வருவது உறுதியாகியுள்ளது.

விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், நயன்தாராவின் நெற்றிக்கண், திரிஷாவின் ராங்கி ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியாக பேச்சுவார்;த்தைகள் நடந்து வருகின்றன.
தொடர்ந்து தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் உருவான கடைசி விவசாயி படமும் ஓடிடிக்கு வர உள்ளதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்கிறது படக்குழு.

விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் படமாக கடந்;தாண்டு ஜெயம் ரவி நடித்த பூமி படம் வெளியானது. இப்போது விவசாயியின் அவசியத்தை உணர்த்தும் படமாக விஜய் சேதுபதி படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நல்லாண்டி என்ற வேடத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். அவருடன் யோகிபாபுவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அயனகாபோஸ் ஒளிப்பதிவில், இளையராஜா இசையமைக்கும் படம் இது. தற்போது பிக்பாஸ் புகழ் கவின் நடித்த லிப்ட் படமும் ஓடிடியில் வெளியாகவுள்ளது.





