More

தீபிகாவுடன் ஜோடிப் போடும் மகேஷ் பாபு… வில்லனாகும் மாஸ் ஹீரோ.. பரபரக்கும் தகவல்கள்

இதிகாச கதைகளை இயக்குவதில் எல்லா மொழி இயக்குனர்களுமே பெரிய ஆசை காட்டுவர். அப்படி பல வகையில் உருவாகி இருக்கிறது ராமாயண காவியம். இதில், தமிழ் மற்றும் இந்தியில் வெளியான ராவணன் படம் பெரிய வெற்றியை பெற்றது. தற்போது, 3 டி தொழில்நுட்பத்தில் ராமாயண கதை உருவாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் தயாராக இருக்கும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

Advertising
Advertising

இதில் ராமராக மகேஷ் பாபு, சீதையாக தீபிகா படுகோனே  நடிக்க இருக்கிறார்கள். ராவணன் வேடத்தில் பாலிவுட் ஹிட் ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மிகப்பெரிய உருவாகும் இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் ரூ.250 கோடி ஒதுக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதலில், ராமர் வேடத்தில் பிரபாஸ் தான் நடிக்க இருந்ததாக தெரிகிறது. ஆனால், படத்தின் வேலைகள் காலதாமதமாவதால் படத்தில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறார். ராமாயண கதையாக உருவாக இருக்கும் ஆதிபுருஷ் படத்திலும் பிரபாஸ் ராமராக தான் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் ராவணனாக சைப் அலி கான் நடிக்கிறார்.

Published by
adminram

Recent Posts