ஆனாலும், இரு சக்கர வாகனங்களில் இளசுகள் அங்கும் இங்கும் சுற்றி வருவது தொடர்ந்து வருகிறது. அதுபோல், அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்கிறோம் என்கிற பெயரில் தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு செல்வதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் மக்கள் வெளியே வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அணியாவிட்டால் அனுமதி பாஸ் ரத்து செய்யப்பட்டு, அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்து 3 மாதங்கள் வைக்கப்படும். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்ததற்காக ஏற்கனவே சென்னையில் பலர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…
தனுஷ் மற்றும்…