More

76 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மக்களின் தாகம் தீர்க்க போகும் நீர்த்தேக்கம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் புதிய நீர்த்தேக்கத்தை திறந்து வைத்தார்.

Advertising
Advertising

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சென்னை மாவட்டத்தின் குடிநீர் தேவைக்காக திருவள்ளூரில் உள்ள பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 4 ஏரி மற்றும் கடலூரில் வீராணம் ஏரி ஆகியவற்றை பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.

அதையடுத்து தற்ப்போது திருவள்ளூர் மாவட்டத்தில் கண்ணன் கோட்டை மற்றும் தேர்வாய் கண்டிகை கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளை இணைத்து புதிதாக கண்டிகை நீர்த்தேக்கம் பொதுமக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத்திட்டமான இந்த அணை 2013ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 380 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு 1485 ஏக்கர் பரப்பளவில் 500 மில்லியன் கன அடி நீரை சேமிக்கிறது.

இந்த அணையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து பெறப்படும் கிருஷ்ணா நதி நீர், கண்டலேறு பூண்டி கால்வாயிலிருந்து 8.60 கிலோ மீட்டர் நீளத்திற்கு இணைப்புக் கால்வாய் அமைத்து இங்கு கொண்டு வரப்படும். இதனால் சென்னையின் குடிநீர் பயன்பாட்டிற்கு தினமும் 65 மில்லியன் லீட்டர் நீர் வழங்கப்படும்.

அதுமட்டுமல்லாது நீர்த்தேக்க சுற்றுப்பகுதிகளில் உள்ள, 700 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு, பாசன வசதி கிடைக்கும். இதற்காக, ஐந்து மதகுகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுப் பகுதிகளின் சாகுபடி மட்டுமின்றி, நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், இந்த நீர்த்தேக்கம் வழிவகை செய்யும்.  76 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நீர்த்தேக்கம் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், நீரளவை தளத்தின் மேல் பகுதியில் இருந்து, நீர்த்தேக்கத்தின் முழு அழகையும் கண்டு ரசிக்கும் வகையில் அழகிய ‘வியூ பாயின்ட்’  அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்தை பராமரிக்கும் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தங்க அறைகள் ஒதுக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பான முறையில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் சென்னை வாசிகள் தண்ணீர் பஞ்சத்தில் இருந்து மீறி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Published by
adminram

Recent Posts