ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்வது, வீடியோ கால் பேசுவது என தற்போது இன்றியமையாத ஒன்றாக வாட்ஸ் அப் மாறியுள்ளது.
இந்நிலையில், செய்திகளை பகிரும் அளவைக் குறைக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. தற்போது ஒரு தகவலை நீங்கள் 5 பேருக்கு மட்டுமே அனுப்பும் வசதி உள்ளது.
இந்நிலையில், அதிகம் பகிர்ந்த தகவலை இனிமேல் ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும். செய்திகளை பார்வர்டு செய்யும் போது ஒருவருக்கோ அல்லது ஒரு குழுவுக்கு மட்டுமே உங்களால் அனுப்ப முடியும் என்கிற புதிய கட்டுப்பாடு வருகிறது. கொரோனா வைரஸ் தொடர்பாக பரவும் வதந்திகளை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒருத்தருக்கு மட்டுமே மேசேஜ் அனுப்ப முடியும் என்கிற கட்டுப்பாடு வாட்ஸ் அப் பயன்படுத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
SK 23:…
நடிகர் அஜித்தின்…
நடிகர் யோகிபாபு…
Rajkumar periyasamy:…
மாரி செல்வராஜ்…