மோடியை பாலோ பண்ண வைத்த இளைஞர் – புத்தாண்டு வேண்டுகோள் நிறைவேறியது !

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தன்னை பாலோ செய்ய சொன்ன இளைஞரை டிவிட்டரில் பின் தொடர ஆரம்பித்துள்ளார் மோடி.

இந்திய அளவில் டிவிட்டரில் அதிகம் பேரால் பின் தொடரப்படும் நபராக மோடி இருக்கிறார். உலகளவிலும் ஒபாமா மற்றும் ட்ரம்ப்புக்கு அடுத்த படியாக பாலோயர்ஸ் கொண்டவராக மோடி உள்ளார். ஆனால் மோடி டிவிட்டரில் 2381 பேரை மட்டுமே பாலோ செய்கிறார்.

இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அங்கிட் துபே என்ற நபர், ’ மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு, நான் உங்கள் தீவிர ரசிகர். புத்தாண்டு பரிசாக நான் ஒன்று கேட்பேன். அதை தருவீர்களா? நீங்கள் என் ட்விட்டர் கணக்கை தயவு செய்து பின் தொடர வேண்டும்’ என கோரிக்கை வைத்தார். அதையடுத்து மோடி அந்த இளைஞரை பின் தொடர்ந்து அவரது வேண்டுகோளை பூர்த்தி செய்தார்.

Published by
adminram