சூர்யா ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு – இன்று மாலை 5 மணிக்கு அதிரடி அறிவிப்பு…

கடந்த 2019ஆம் ஆண்டு சூர்யா நடித்த காப்பான் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த ஆண்டு அவர் நடித்துள்ள சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அனேகமாக வரும் ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து சற்று முன்னர் இந்த படத்தின் செகண்ட்லுக் வெளியாகும் தேதி குறித்த அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது

சூரரைப்போற்று படத்தின் இரண்டாம் லுக், இன்றைய புத்தாண்டு பரிசாக இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனை இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து சூர்யா ரசிகர்கள் இதுகுறித்த ஹேஷ்டேக்கை மிக வேகமாக பகிர்ந்து வருவதால் இந்திய அளவில் சூரரை போற்று டிரெண்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யா ஜோடியாக ‘சர்வம் தாளமயம்’ நாயகி அபர்ணா பாலமுரளி நடித்துள்ள இந்த படத்தில் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவும், சதீஷ் சூர்யா படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

Published by
adminram