தளபடி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிவரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது
வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டுக்கு இந்த படத்தை திரையிட படக்குழுவினர் திட்டமிட்ட நிலையில் அதிகபட்சமாக பிப்ரவரி இறுதியில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் வியாபாரம் மற்றும் கேரளாவில் உரிமை வியாபாரம் முடிவடைந்ததை அடுத்து தற்போது புரமோஷன் பணிகள் ஆரம்பமாகியுள்ளன
முதல்கட்டமாக இந்த படத்தின் டைட்டில் வரும் 31ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் இணையதளங்களின் மூலம் அறிவித்துள்ளனர். இதனை அடுத்து புத்தாண்டு பிறப்பதற்கு ஒரு நாள் முன்னரே தளபதி ரசிகர்கள் புத்தாண்டு பரிசு கிடைக்க இருப்பது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் 2020ஆம் ஆண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
சினிமாவில் நடிக்க…
பழம்பெரும் நடிகை…
1960 காலகட்டங்களில்…
தமிழ் சினிமாவில்…
கோட் திரைப்படத்திற்குப்…