இந்தியாவுக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் நியுசிலாந்து முதலில் பேட் செய்து 20 ஓவர்கள் முடிவில் ரன்கள் சேர்த்துள்ளது.
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி இன்று காலை 12.20 மணிக்கு ஆக்லாந்து மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதை தொடர்ந்து ஆடிய நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள் ருத்ர தாண்டவம் ஆடினர்.
இந்திய பவுலர்களைக் கொஞ்சம் கூட மதிக்காமல் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாகப் பறக்க விட்டனர். அந்த அணியின் மார்ட்டின் குப்தில் (30), காலின் மன்ரோ (52), கேன் வில்லியம்ஸன் (51), ராஸ் டெய்லர் (54)என இறங்கிய அனைவரும் வான வேடிக்கைக் காட்டினர்.
இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியுசிலாந்து அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியில் பூம்ராவைத் தவிர அனைவருமே மோசமாக பந்து வீசினர். பூம்ரா, தாகூர், சஹால், துபே, ரவீந்தர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…