சூப்பரா ஆரம்பித்து சுருண்ட நியுசிலாந்து – இந்திய பவுலர்கள் அபாரம் !

Published on: February 8, 2020
---Advertisement---

cf1c72e674f182f324df8c22ebcb4f21

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் நியுசிலாந்து அணி நடுவரிசை ஆட்டக்காரர்களின் சொதப்பலால் தடுமாறி வருகிறது.

நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியை நியுசிலாந்து வென்றுள்ள நிலையில் இரண்டாவது போட்டி இன்று நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார்.

அதையடுத்துக் களமிறங்கிய நியுசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கப்தில் மற்றும் நிக்கோல்ஸ் முறையே 79 மற்றும் 41 ரன்கள் சேர்த்து சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். அதன் பின் வந்த வீரர்களில் பிளண்டல்(22) மற்றும் ராஸ் டெய்லர்(31*) ஆகியோர் மட்டுமெ இரட்டை இலக்க எண்களை எட்டினர். மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்க எண்களிலேயே நடையைக் கட்ட அந்த 191 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா சார்பில் சஹால் 3 விக்கெட்களும், தாகூர் 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

Leave a Comment