தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா அடுத்ததாக டேஞ்சரஸ் என்ற லெஸ்பியன் கிரைம் த்ரில்லர் படத்தை இயக்கி வருவதாக அறிவித்துள்ளார்.
இந்திய சினிமாவில் சர்ச்சைக்குப் பெயர் போனவர் ராம் கோபால் வர்மா. அவர் இயக்கும் படங்களும் அதற்கு எந்த வகையிலும் குறைந்ததில்லை. சமீபகாலமாக கொரோனா லாக்டவுனால் படப்பிடிப்புகள் நடத்த முடியாத சூழல் உருவானாலும் அவர் வரிசையாக தனது படங்களை தனது சொந்த ஓடிடி சேனலிலேயே வெளியிட்டு வருகிறார். அந்த படங்கள் எல்லாம் 18+ ஆக இருப்பதால் இளைஞர்கள் பெரியளவில் ஆர்வமாக பணம் கட்டிப் பார்த்து வருகின்றனர். இதனால் அவரும் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார்.
கடைசியாக த்ரில்லர் என்ற படத்தை வெளியிட்ட ராம்கோபால் வர்மா அடுத்ததாக டேஞ்சரஸ் என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் லெஸ்பியன்களைப் பற்றிய படம் என சொல்லப்படுகிறது. இதில் அப்ஸரா ராணி மற்றும் நைனா கங்குலி ஆகிய இரு நடிகைகளும் கதாநாயகிகளாக நடிக்க இருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் கதாநாயகிகள் இருவரும் நெருக்கமாக முத்தமிட்டுக் கொள்ளும் காட்சிகளை வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளார்.
Sun serials:…
Veera Dheera…
மஞ்சுவாரியர் பெயரை…
Biggboss Tamil:…
கன்னட உலகின்…