பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதோடு, தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் கவர்ச்சியான உடையணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும், நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்ட திரைப்படம் மூலம் சினிமாவில் நுழைந்த மாளவிகா மோகனன் விஜய், சூர்யா, கார்த்தி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதால் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.





