நிர்பயா குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன தெரியுமா?…

Published on: January 23, 2020
---Advertisement---

f2773b2e52de167392910c90a93823d6

நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னர் அவர்களின் கடைசி ஆசையை சிறைத்துறை நிர்வாகம் கேட்டுள்ளது.

டெல்லி நிர்பயா கொலைக் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி நிறைவேற்றப்பட இருக்கிறது. இதற்கான தயாரிப்புகளில் திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. தூக்குத் தண்டனை கைதிகளிடம் அவர்களின் தண்டனைக்கு முன்னர் அவர்களின் கடைசி ஆசையைக் கேட்பது வழக்கம்.

அதையடுத்து  நிர்பயா குற்றவாளிகளிடமும் அந்த கேள்வியைக் கேட்டுள்ளனர் அதிகாரிகள். ஆனால் அவர்கள் அதுகுறித்து இதுவரை நான்கு பேரும் எந்த பதிலும் சொல்லவில்லையாம். கடைசியாக தன் குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் எனக்கூட அவர்கள் கூறவில்லையாம்.  குற்றவாளிகளின் தண்டனைக் குறித்து அவர்களின் குடும்பத்தாருக்கு கடிதம் மூலம் தகவல் சொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment