நிர்பயா கொலை வழக்கு சம்மந்தமான வழக்கு விசாரணையின் போது நிர்பயாவின் தாயாரும் குற்றவாளி ஒருவரின் தாயார் ஒருவரும் சந்தித்து பேசிக்கொண்டனர்.
நாட்டையே உலுக்கிய நிர்பயா கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் ஆறு பேரில் 4 பேருக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தண்டனை விரைவாக அளிக்காமல் தாமதப்படுத்துவதாக நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி போராடி வருகிறார்.
இது சம்மந்தமான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங்கின் தாய், நிர்பயா தாயிடம் சென்று தனது மகனை மன்னிக்குமாறு கெஞ்சினார். அதற்குப் பதிலளித்த ஆஷா தேவி ‘எனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்’ எனக் கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள் நிர்ணயித்த படி ஜனவரி 22 ஆம் தேதி 4 பேருக்கும் தூக்குத் தண்டனை அளிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…
Pushpa 2:…
சமீபத்தில் தனுஷ்,…
ஏ ஆர்…