நீதிமன்ற உத்தரவை ஏற்று ஆஜராகாமல் இழுத்தடித்து வந்த நித்யானந்தாவின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாலியல் வழக்கில் சிக்கி சிறையில் இருந்த நித்யானந்தாவுக்குக் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு பலமுறை நீதிமன்றத்தில் ஆஜராக சொன்னபோதும் வாய்தா வாங்கிக் கொண்டு அவர் நீதிமன்றத்தை அவமதித்தார். இந்நிலையில் அவரின் ஜாமீனை ரத்து செய்யவேண்டும் என லெனின் கருப்பன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
அந்த வழக்கின் விசாரணையின் போது காவல் துணை ஆணையர் பி.பால்ராஜ் நித்யானந்தா ஆன்மீக சுற்றுலாவில் இருப்பதால் அவரது சிஷ்யையான குமாரி அர்ச்சனானந்தாவிடம் அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது எனத் தெரிவித்தார். இது சம்மந்தமாக பதிலளித்த அர்ச்சனானந்தா, தனக்கும் நித்யானந்தா எங்கு இருக்கிறார் எனத் தெரியாது எனக் கூறினார்.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி மைக்கேல் டி குன்ஹா ‘நித்யானந்தாவுக்கு பாலியல் வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்கிறது..’ என அறிவித்துள்ளார். போலி பாஸ்போர்ட் வெளிநாட்டில் இருப்பதால் அவரை போலிஸார் தேடி வருகின்றனர். இப்போது ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
பொதுவாக பொங்கல்,…
இறுதிச்சுற்று சூரரைப்போற்று…
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…