ஆர்டர் பண்ண சாப்பாட்ல கரப்பான் பூச்சி… பொங்கி எழுந்த நடிகை நிவேதா பெத்துராஜ்….

தமிழ் சினிமாவில் திமிரு பிடிச்சவன், டிக் டிக் டிக், சங்கத்தமிழன், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ். தெலுங்கில் ஹிட் அடித்த அல வைகுண்டபுரமுலோ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தார். இதன் மூலம் தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், சென்னையில் ஆன்லைனில் உணவு விற்பனை செய்யும் ஸ்விகி மொபைல் ஆப் மூலம் அவர் உணவை ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவை சாப்பிட துவங்கிய போது அதில் கரப்பான் பூச்சி இருந்ததை அவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஏற்கனவே ஒரு முறை இதேபோல் நடந்தது எனக் கூறி புகைப்படத்துடன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து. 

இதைத்தொடர்ந்து, அவருக்கு உணவு சப்ளை செய்த சென்னை பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலுக்கு சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அக்கடைக்கு தற்காலிக தடை விதித்தனர். மேலும், குறைகளை நிவர்த்தி செய்து புகைப்பட ஆதாரங்களை 3 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Published by
adminram