தங்கசுரங்கம் எதுவும் இல்லை – வாட்ஸ் ஆப் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி !

உத்தர பிரதேச மாநிலத்தில் 3350 டன் எடை தங்கம் உள்ள இரு தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வெளியானது.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரபிரதேசத்தில் உள்ள சோன்பத்ரோ எனும் பகுதியில் 3350 டன் எடை அளவு தங்கம் இருக்கும் இரு தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நேற்று ஒரு செய்தி வெளியானது. மேலும் இந்த தங்கத்தின் அளவானது இந்தியாவின் கையிருப்பை விட 4 மடங்கு அதிகம் என்றும் இதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் ஏற்றம் காணும் எனவும் அந்த செய்தியில் சொல்லப்பட்டது.

இந்த செய்தி வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இந்நிலையில் அந்த செய்தியில் உண்மை இல்லை என்று இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் அந்த தகவலை மறுத்துள்ளது. மேலும் சிலரோ தங்க சுரங்கம் இருப்பது உண்மைதான் என்றும் ஆனால் ஒரு டன் கனிமத்தில் 3 கிராம் அளவுக்கு மட்டுமே தங்கம் இருப்பதாகவும், இதன் மூலம் 160 டன் அளவுக்கு தங்கம் கிடைக்கலாம் என சொல்லி வருகின்றனர்.

Published by
adminram