More

ஏப்.14ம் தேதிக்கு பின் 144 ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? – மத்திய அரசு விளக்கம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000 ஐ தொட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஐ நெருங்கி வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆங்காங்கே உள்ள மருத்துவமனைகளில் வைத்து சிறப்பு வார்டுகள் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertising
Advertising

வைரஸ் பரவலைத் தடுக்க நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்த ஊரடங்கு அமல் ஏப்ரல் 14 ஆம் தேதியோடு முடிவடைகிறது. ஆனால் மத்திய அரசு மேலும் இந்த ஊரடங்கை நீட்டிக்கும் என செய்திகள் பரவின. இதையடுத்து இது சம்மந்தமாக மத்திய அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில் ‘ஊரடங்கை மேலும் நீட்டிக்கும் எண்ணம் தற்போது வரை இல்லை’ என விளக்கமளித்துள்ளது.

Published by
adminram

Recent Posts