கூகுள் தனது புதிய சேவையாக மொபைல் எண்களை ரீசார்ஜ் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.
மொபைல் போன்களை ரீசார்ஜ் செய்ய கடைகளுக்கும் ரீசார்ஜ் கார்டுகளை வாங்கியும் அலைந்து கொண்டிருந்த வேளையில் இப்போது ஆன்லைனிலேயே ரீசார்ஜ் செய்யும் வசதிகள் அறிமுகமாகியுள்ளனர். ஒவ்வொரு நெட்வொர்க் நிறுவனங்களும் இதற்காக தனியாக செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ள வேளையில் கூகுள் அதை இன்னும் எளிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
கூகுளீல் மொபைல் நம்பர் ரீசார்ஜ் என டைப் செய்தால் அதில் மொபைல் எண் மற்றும் ஸோன் குறித்த விவரங்களைப் பெற்றுக்கொண்டு பின்னர் எந்தெந்த செயலில் லாபகரமான பிளான்கள் உள்ளன எனக் காட்டும். அதில் நமக்கு வசதியான ஆப்பின் மூலம் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இப்போது இந்த வசதி ஏர்டெல், வோடபோன்–ஐடியா, ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கான ரீசார்ஜ் ப்ளான்கள் உள்ளன. விரைவில் மற்ற நிறுவனங்களுக்கான பிளான்களும் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
பிரபல சினிமா…
Nayagan: மணிரத்னம்…
நடிகை பார்வதி…
நடிகை திரிஷா…
கங்குவா படம்…