இந்தியாவில் கொரொனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலனங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. பிரதமர் அறிவித்த ஊரடங்கு முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என சொல்லப்பட்டு வருகிறது.
இதுபற்றி மருத்துவர்கள் குழு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் முடிவில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நோயாளிகளின் நேற்று கண்டறியப்பட்ட 96 புதிய நோயாளிகளின் மூலம் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது.
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…
தனுஷ் மற்றும்…