கடைகளில் கொரோனா பீதியைப் பயன்படுத்தி அதிக விலைக்கு சானிட்டைசர்கள் விற்கப்படுவதைக் கண்டித்து நகைச்சுவை நடிகர் பாலசரவணன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரைப்படங்களில் வளரும் நகைச்சுவை நடிகராக அறியப்படுபவர் நடிகர் பாலசரவணன். நேற்று அவர் கொரோனா பீதியைப் பயன்படுத்தி சானிட்டைசர்கள் அதிகவிலைக்கு விற்கப்படுவது குறித்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ‘மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் ஹேண்ட் சானிட்டைசர் தீர்ந்து விட்டதால் ,வாங்க போயிருந்தேன். 60 ரூபாய் விலையுள்ள சானிட்டைசர் 135 ரூபாய் என்று விற்கிறார்கள். அது குறித்து பில் போடுபவரிடம் கேட்டதற்கு ‘நான் என்ன செய்ய முடியும். நான் இங்கே வேலைதான் பார்க்கிறேன்’ என்று கூறினார். இன்று காபி குடிக்கும் கடைக்கு சென்ற போதும் அங்கு வேலை செய்யும் அக்காவும் இதே போல அதிக விலைக்கு சானிட்டைசர் வாங்கியதாக சொல்லி புலம்பினார்.
இந்த அச்சுறுத்தலான சூழ்நிலையைப் பயன்படுத்தி அனைவரும், சானிட்டைசர்களை இரு மடங்கு மூன்று மடங்கு என விலையேற்றி விற்கின்றனர். இந்த மாதிரியான நேரங்களில்தான் பெரிய நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் தந்து மக்களை ஊக்குவிக்க வேண்டும். இந்த ஊரில் இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் சாதி ஒழியாது, ஏற்றத் தாழ்வு மாறாது, எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. ஒரு ஆணியும் புடுங்க முடியாது.’ எனத் தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் படங்கள்…
நடிகர் பார்த்திபன்…
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…