கோலிவுட் தேவையில்லை. ஹாலிவுட்டுக்கு போறேன்.. தெறிக்கவிட்ட பார்த்திபன்

புதிய மற்றும் வித்தியாசமான முயற்சியாக பார்த்திபன் ஒருவர் மட்டுமே இயக்கி நடித்து வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு. இப்படம் பல விருதுகளை பெற்றுள்ளது. இப்படத்தை ஆஸ்கர் விருதுக்கும் பார்த்திபன் அனுப்பியிருந்தார். ஆனால், ஆஸ்கர் நாமினேசனில் இப்படம் இடம் பெறவில்லை.

இந்நிலையில், ஒரு ரசிகர் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ கவலைப்படாதீர்கள். பணம் செலவு செய்துதான ஆஸ்கர் விருதை வாங்க வேண்டுமெனில் நமக்கு அது தேவையில்லை. நீங்கள் கோலிவுட்டில் இருக்க வேண்டிய ஆள் இல்லை. ஹாலிவுட்டின் மார்ட்டின் ஸ்கோர்சீஸ்க்கு இணையானவர். ஒரு ஹாலிவுட் தயாரிப்பாளை அணுகி ஒத்த செருப்பு திரைப்படத்தை ஹாலிவுட்டில் எடுங்கள். உங்களுக்கான சிறப்பு கிடைக்கும்’ என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் கூறியுள்ள பார்த்திபன் ‘ நன்றி. இதுபற்றி ஏற்கனவே ஹாலிவுட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது’ என பதிவிட்டுள்ளார்.

Published by
adminram