More

என்னை யாரும் கடத்தவில்லை – இளமதி அந்தர் பல்டி

இதையடுத்து, இளமதி வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையொட்டி வீட்டிலிருந்து வெளியேறிய இளமதி, செல்வனுடன் சேலம் வந்தார்.அவர்களுக்கு காவலாண்டியுரில்  திராவிடர் விடுதலை கழக உறுப்பினர் ஈஸ்வரன் உள்ளிட்ட சிலர் திருமணம் செய்து வைத்தனர். 

அப்போது அங்கு வந்த 40க்கும் மேற்பட்டோர் திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த ஈஸ்வரன் மற்றும் காதல் ஜோடியை கடுமையாகத் தாக்கினர். அதன்பின் இளமதியை அந்த கும்பல் கடத்திச் சென்றுவிட்டது. இதனையடுத்து, கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து இளமதியை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

இந்நிலையில், கடத்தப்பட்ட இளம்பெண் இளமதி சேலம் மேட்டூர் மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை வழக்கறிஞருடன் ஆஜரானார். அப்போது, தான் தனது பெற்றோருடன் செல்ல விரும்பவதாக வாக்குமூலம் அளித்தார்.  அவரை வருகிற 16ம் தேதி திங்கள் கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி அவரை பெற்றோருடன் அனுப்புவது குறித்து போலீசார் முடிவு செய்வார்கள் என செய்திகள் வெளியானது.

இந்நிலையில், தனது மனைவியை அவரின் பெற்றோர்கள் உள்ளிட்ட சிலர் கடத்தி சென்றுவிட்டதாக சேலம் நீதிமன்றத்தில் இளமதியின் கணவர் செல்வன் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி முன் ஆஜரான இளமதி, தன்னை யாரும் கடத்தவில்லை, சுயவிருப்பத்தில் தான் பெற்றோருடன் சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Advertising
Advertising

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் கடுமையாக எதிரொலித்துள்ளது. இளமதியை மிரட்டி அவரின் பெற்றோர் அவரின் மனதை மாற்றி காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் அப்படி சொல்ல வைத்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதற்கு முன் திராவிட விடுதலை கழக நிர்வாகிகள் தன்னை கடத்தவில்லை என்றும், சுய விருப்பத்தின் பெயரிலேயே செல்வனை திருமனம் செய்து கொண்டதாக நீதிமன்றத்தில் இளமதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts