ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தில் வசித்து வருபவர் யர்ராகா பேல்ஸ். இவரின் 9 வயது மகன் குவாடன் மரபணு நோயால் பாதிக்கப்பட்டு உடல் வளர்ச்சி குன்றி கானப்படுகிறான். சிறுவனின் தோற்றத்தைக்கண்டு உடன் படிக்கும் மாணவர்கள் கிண்டலடிப்பதால் குவாடன் மிகவும் மனமுடைந்து போனான்.
இதையடுத்து, தனது தாயிடம் தான் சாக விரும்புவதாகவும் தூக்கு கயிறு அல்லது கூர்மையான பொருள் எதாவது கொடுங்கள் என சிறுவன் கதறுகிறார். ஆனால், அவனுக்கு அவரின் தாய் ஆறுதல் கூறுகிறார். மேலும், உருவக் கேலி செய்யப்படுபவர்கள் எப்படி வேதனைப்படுவார்கள் என்பதை உலக்கு காட்ட நினைத்த அவரின் தாய் அப்போது எடுத்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
அத வீடியோ வைரலாந்து. லட்சக்கணக்கானோர் இதை பார்த்தனர். அவர்கள் குவாடனுக்கும் நம்பிக்கையூட்டும் படியான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பலரும் குவாடனுக்கு ஆதரவாக களம் இறங்கினர். மேலும், தேசிய ரக்பி கால்பந்து போட்டியின் போது சிறுவன் குவாடனை விளையாட்டு மைதானத்திற்குள் வரவழைத்து அந்நாட்டு வீரர்கள் கவுரவித்தனர்.
ஒருபக்கம் ஹாலிவுட் நடிகர் பிராட் வில்லியம்ஸ் குவாடனுக்காக நிதி திரட்டினார். இதில் ரூ.4.75 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.34 கோடி) கிடைத்தது. இதை சிறுவன் குவாடனுக்கு அனுப்பி வைத்த அவர் ‘அமெரிக்காவின் டிஸ்னி லாண்டுக்கு அழைத்து சென்று குவாடனின் ஆசையை நிறைவேற்றுங்கள் ‘எனக்கூறியிருந்தார்.
ஆனால், குவாடனின் தாய் அப்பணத்தை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்போவதாக அறிவித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். என் மகனின் வாழ்கையை யாரேனும் வாழ்ந்திருந்தால் டிஸ்னிலேண்டுக்கு செல்ல விரும்ப மாட்டார்கள். அவரின் தன் அன்றாட வாழ்வில் பல சவால்களை எதிர்கொண்டான். அவமானப்படுத்தப்பட்டான். அதை விளையாடி தப்பிக்க முடியாது. யாரும் அது போல் வாழக்கூடாது. எனவே இந்த பணத்தை தொண்டு நிறுவனத்துக்கு வழங்குப் போகிறோம். இந்த பணத்தில் சமூகத்தில் உள்ள குழந்தைகள் பயன் பெறுவதுதான் முக்கியமானது.’ என அவர் கூறியுள்ளார்.
அவருக்கு உலகமெங்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Sun serials:…
Good Bad…
AR Rahman:…
Pushpa 2:…
தமிழ் சினிமாவில்…